தெய்வீக திட்டத்தின் நிருபங்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட போதனைக்குரிய (#11408)

*ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டவை

ஒப்புவமையற்றக் கடவுளே! இராஜ்யத்தின் அதிபதியே! இவ்வான்மாக்கள் உமது வான்படைகள். அவர்களுக்கு உதவி புரிந்து, உமது அதிமேலான தெய்வீகச் சேனைகளைக் கொண்டு அவர்களை வெற்றி பெறச் செய்வீராக; அதனால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு படையைப்போல் ஆகி, ஆண்டவனின் அன்பின் வழியாகவும் தெய்வீகப் போதனையின் பிரகாசத்தின் வழியாகவும் இந் நாடுகளை வெற்றிகொள்ளக் கூடும். 

கடவுளே! நீர் அவர்களது ஆதரவாளராகவும் அவர்களது உதவியாளராகவும் ஆகி, வனாந்திரங்களிலும், மலைகளிலும், பள்ளத்தாக்கு-களிலும், காடுகளிலும், புல் வெளிகளிலும், கடல்களிலும் அவர்களின் அந்தரங்கத் தோழராவீராக; அதனால் அவர்கள் இராஜ்யத்தின் சக்தியாலும், உமது பரிசுத்த ஆவியின் சுவாசத்தினாலும் கூக்குரலிடக் கூடும். 

மெய்யாகவே, சக்தி மிக்கவரும், வலிமையுடையவரும், சர்வ வல்லவரும் நீரே; விவேகியும், செவிமடுப்பவரும், கண்ணுறுபவரும் நீரே.

-`Abdu'l-Bahá
-----------------------

தெய்வீக திட்டத்தின் நிருபங்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட போதனைக்குரிய (#11409)

*ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது 

எவரேனும் எந்த இடத்திற்காவது போதனை செய்யப் பயணப்படுவாராயின், அவர் இந்தப் பிரார்த்தனையைப் பகலிலும் இரவிலும் அந்நிய நிலங்களில் அவர் பயணம் செய்கையில் ஒப்புவிக்கட்டுமாக.

கடவுளே, என் கடவுளே! நான் உமது மகத்துவமிக்க இராஜ்யத்தின்பால் வசீகரிக்கப்பட்டும், கவரப்பட்டும் இருப்பதை நீர் காண்கின்றீர். மனிதர்களிடையே உமதன்பெனும் நெருப்பினால் தூண்டப்பட்டு, இவ் விசாலமான பரந்த நிலங்களில் உமது இராஜ்யத்தின் முன்னோடியாக, உம்மைத் தவிர மற்றெல்லாவற்றிலும் இருந்து பற்றறுத்து, உம்மையே நம்பி, ஓய்வையும் சுகத்தையும் கைவிட்டு, என் தாயகத்திலிருந்து வெகு தூரமாக, இப்பகுதிகளில் ஒரு நாடோடியாக, மண்ணில் வீழ்ந்த ஓர் அந்நியனாக, உமது மேன்மை படுத்தப்பட்ட வாசலில் பணிவாக, உமது எல்லாம் வல்ல மேன்மை எனும் சுவர்க்கத்தின்பால் தாழ்மையுடன், நடு இரவிலும் வைகறையிலும் உம்மை இறைஞ்சி வேண்டி, காலை வேளையிலும் அந்திச்சாய்விலும், உமது சமயத்திற்குச் சேவை செய்திடவும், உமது போதனைகளை அயல்நாடுகளில் பரப்புவதிலும், கிழக்கு, மேற்கு அனைத்திலும் உமது திருமொழியை மேன்மைப்படுத்திடவும், எனக்குக் கருணைகூர்ந்து உதவுமாறு, உம்மைக் கெஞ்சி பிரார்த்திக்கின்றேன்.

பிரபுவே! என் முதுகைப் பலப்படுத்துவீராக, முழு முயற்சியோடு உமக்கு ஊழியம் செய்ய என்னை வலுப்படுத்துவீராக; இந்த நிலங்களில் என்னை தனியொருவனாகவும்   துணையில்லாமலும் விட்டுவிடாதீர்.  

பிரபுவே! எனது தனிமையில் உம்மோடு தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பளிப்பீராக; இந்த அந்நிய  நிலங்களில் எனக்குத் துணைவனாக இருப்பீராக.  

மெய்யாகவே, உமக்கு விருப்பமான எவர் ஒருவரையும் நீர் விரும்புகின்றவற்றில் உறுதிபடுத்துபவர் நீரே. மெய்யாகவே சர்வ-வலிமையுள்ளவரும், சர்வபலம் பொருந்தியவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

தெய்வீக திட்டத்தின் நிருபங்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட போதனைக்குரிய (#11410)

*ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது

போதனை செய்வதற்காக மலை, பாலைவனம், நிலம் கடல் போன்ற வெவ்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்பவோர் இப்பிரார்த்தனையைக் கூறட்டும்:

கடவுளே! கடவுளே! உமது உயிரினங்கள் முன் எனது பலவீனத்தையும், தாழ்வையும்  பணிவையும் நீர் காண்கின்றீர்; இருப்பினும், உமது  சக்தியையும் வலிமையையும் எதிர்பார்த்து, நான் உம்மீது   நம்பிக்கை வைத்து,  உமது   பலம்பொருந்திய ஊழியர்களின் மத்தியில் உமது போதனைகளை மேம்படுத்திட எழுந்துள்ளேன்.

பிரபுவே! சிரகொடிந்த ஒரு பறவையான  நான், உமது எல்லையில்லா வானத்தில் உயரப் பறந்திட ஆவல் கொண்டுள்ளேன். உமது தெய்வாதீனம்,  கிருபை, உமது உறுதிப்பாடு, உதவி  ஆகியவற்றின் வாயிலாகவலல்லாது எங்ஙகனம் நான் இதைச் செய்திட இயலும். 

பிரபுவே! எனது பலவீனம்  மீது பரிவு காட்டுவீராக; உமது சக்தியைக் கொண்டு என்னை பலப்படுத்துவீராக.  பிரபுவே! எனது வலுவின்மை மீது பரிவு காட்டி, உமது வலிமை, மாட்சிமை ஆகியவற்றின்  வாயிலாக எனக்கு உதவிடுவீராக.

பிரபுவே!  பரிசுத்த ஆவியின் மூச்சு மிக வலுவற்ற ஜீவனை உறுதி செய்திடுமாயின், தான் அவல்கொண்ட அனைத்தையும் அடைந்து, தான் விரும்பிய எதனையும் அவன் பெற்றிடுவான். மெய்யாகவே, கடந்த காலங்களில் நீர் உமது  ஊழியர்களுக்கு உதவிப் புரிந்துள்ளீர்கள்; அவர்கள் உமது உயிரினங்களுள் மிக வலுவற்றவர்களாக இருப்பினும், உமது ஊழியர்களுள் மிகத் தாழ்ந்தவர்களாக இருப்பினும், உலகில் வாழ்ந்தவர்களுள் மிக அற்பமானவர்களாக இருப்பினும், உமது  ஒப்புதல், ஆற்றல் ஆகியவை வாயிலாக அவர்கள் உம்  மக்களிலேயே மிகப் போற்றத்தக்கவர்களுக்கு மேலாகவும், மனிதர்களுள் மிக உன்னதமானவர்களுக்கும் மேலாகவும் முதலிடத்தை அடைந்துள்ளனர். முன்னர் விட்டிற் பூச்சாக இருந்த அவர்கள், உமது அருட்கொடையினாலும், உமது கருணையின் வாயிலாகவும் அவர்கள் அரசு வல்லூறாக ஆகினர்; முன்னர் ஓடைகளாக இருந்த அவர்கள், கடல்களாக ஆகினர், உமது  அதிபெரும் தயையின் வாயிலாக, அவர்கள் வழிகாட்டல் எனும் தொடுவானத்தின் மீது பிரகாசிக்கும் விண்மீன்களாக ஆகினர், இறவாமை எனும் ரோஜா தோட்டங்களில் பாடும் பறவைகளாக ஆகினர்; அறிவு, விவேகம் எனும் காடுகளில் கர்ஜிக்கும் சிங்கங்களாக ஆகினர்; வாழ்வென்னும் சமுத்திரங்களில் நீந்திடும் திமிங்கிலங்களாக ஆகினர். 

மெய்யாகவே, நீரே அருளிரக்கமுடையவர், சக்திமிக்கவர், வலிமைமிக்கவர், இரக்க-முள்ளோர்களுள் அதி இரக்கமுடையவர் ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

தெய்வீக திட்டத்தின் நிருபங்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட போதனைக்குரிய (#11411)

*ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிலுள்ள  பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது

கடவுளே! என் கடவுளே! எல்லாப் பிரதேசங்களையும் காரிருள் சூழ்ந்திருப்பதை நீர் காண்கின்றீர், எல்லா நாடுகளும் உடன்பாடின்மை என்னும் தீப்பிழம்பினால் பற்றி எரிகின்றன; பூமியின் கிழக்கிலும் அதன் மேற்கிலும் போர், படுகொலை என்னும் தீ கொழுந்து விட்டு எரிகின்றது. இரத்தம் சிந்தப்படுகின்றது, பிணங்கள் எங்கும் பரவிக் கிடக்கின்றன, தலைகள் துண்டிக்கப்பட்டுப் போர்க்கள மண்ணில் வீழ்கின்றன. 

பிரபுவே! அறியாமையில் இருக்கும் இவர்கள்மீது இரக்கங் காட்டுவீராக, மன்னிப்பு, பிழை பொறுத்தல் என்னும் கண்ணால் அவர்களை நோக்குவீராக. இத்தீயினை அணைத்திடுவீராக; அதனால் தொடுவானத்தை மூடி மறைத்துள்ள இருண்ட மேகங்கள் கலைக்கப்படக்கூடும், மெய்ம்மைக் கதிரவன் இணக்கம் எனும் ஒளிக் கதிர்களைக் கொண்டு பிரகாசித்திடக் கூடும், இக்கடும் இருள் அகற்றப்பட்டு தேசங்கள் எல்லாம் சமாதான ஒளிகளால் பிரகாசிக்கக் கூடும். 

பிரபுவே! கடும் வெறுப்பு, பகைமை என்னும் கடலின் ஆழத்திலிருந்து அவர்களை மீட்டு, இவ்வூடுருவ இயலா இருளிலிருந்து அவர்களை விடுவிப்பீராக; அவர்களது இதயங்களை ஒன்றுபடுத்தி, அவர்களின் கண்களைச் சமாதானம், இணக்கம் என்னும் ஒளியினைக் கொண்டு பிரகாசிக்கச் செய்வீராக. போர், இரத்தம் சிந்தல் எனும் ஆழத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றி, பிழையெனும் இருளிலிருந்து அவர்களை விழித்தெழச் செய்வீராக. அவர்களது கண்களிலிருக்கும் திரையை அகற்றி, வழிகாட்டுதல் என்னும் ஒளியினால் அவர்களின் இதயங்களைத் தெளிவுப்படுத்துவீராக. உமது மென்கருணை, இரக்கம் ஆகியவற்றின் மூலம் அவர்களை நடத்தி, வலியவர்களின் அவயவங்களை நடுக்கமுறச் செய்திடும் உமது நீதி, உக்கிரம் ஆகியவற்றின்வழி அவர்களை நடத்தாதிருப்பீராக. 

பிரபுவே! மெய்யாகவே போர்கள் நீடித்துள்ளன, மனவேதனைகளும் கவலைகளும் பெரிதும் அதிகரித்துள்ளன, ஒவ்வொரு வளமான பிரதேசமும் பாழ்படுத்தப்பட்டுக் கிடக்கின்றது. 

பிரபுவே! நெஞ்சங்கள் துயருற்றிருக்கின்றன; ஆன்மாக்கள் கடும் மனவேதனையில் இருக்கின்றன. இப்பரிதாபத்திற்குரிய ஆன்மாக்களின் மீது கருணை காட்டுவீராக; அவர்களை  உமது  ஆசைகளின் தகாத செயல்களுக்கு விட்டு விடாதீர்! 

பிரபுவே! அவர்களின் முகங்கள் வழிகாட்டுதல் எனும் ஒளிக் கதிர்களினால் பிரகாசமடைந்து, உலகப் பற்றினைத் துறந்து, உமது நினைவையும், புகழையும் எடுத்தியம்பி, இப்புனித நறுமணத்தினை உமது தேசங்கள் முழுவதிலும் பரவச் செய்திடும் பணிவான, கீழ்ப்படியுந் தன்மையுடைய ஆன்மாக்களை மனித இனத்தின் மத்தியில் அனுப்பியருள்வீராக. 

பிரபுவே! உமது அன்பின் அதிவலிமைமிகு அடையாளத்தின் மூலமாக அவர்களின் முதுகினை வலுப்பெறச் செய்வீராக; அவர்களது இடைகளை உறுதியடையச் செய்து அவர்களின் நெஞ்சங்களைப் பரவசம் அடையச் செய்வீராக. 

பிரபுவே! மெய்யாகவே, அவர்கள் பலவீனர்கள், நீரே சக்திமிக்கவர், வல்லவர்; அவர்கள் ஆற்றலற்றவர்கள், உதவுபவரும், கருணை-மிக்கவரும் நீரே. 

பிரபுவே! கிளர்ச்சி என்னும் சமுத்திரம் பொங்கி யெழுகின்றது, எல்லாப் பிரதேசங்களையும் தழுவியுள்ள உமது எல்லையற்ற அருளின்றி இச்சூறாவளிகள் தணிக்கப்பட மாட்டா! 

பிரபுவே! மெய்யாகவே இம்மனிதர்கள் வெறியுணர்ச்சி என்னும் பாதாளத்தில் கிடக்கின்றனர், உமது எல்லையற்ற வள்ளன்-மையைத் தவிர வேறெதுவுமே அவர்களைக் காப்பாற்ற இயலாது. 

பிரபுவே! துர் ஆசைகள் என்னும் இருளை அகற்றி, நாடுகள் அனைத்தையும் விரைவிலேயே ஒளி பெறச் செய்திடக் கூடிய உமது அன்பெனும் தீபத்தினால், இதயங்களைப் பிரகாசிக்கச் செய்வீராக. மேலும், உமது அழகின் மீதான அன்பின் பொருட்டும், உமது நறுமணங்களைப் பரப்புவதற்காகவும் உமது போதனைகளைப் பிரகடனம் செய்வதற்காகவும், தங்கள் தாய் நாடுகளையும், குடும்பங்களையும், குழந்தை- களையும் விட்டு, அயல்நாடுகளுக்குப் பயணம் செய்திடும் அந்நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துவீராக. 

தனிமையில் நீர் அவர்களுக்குத் தோழனாகவும், முன்பின் அறியா நிலங்களில் அவர்களின் உதவியாளராகவும், அவர்களின் துக்கத்தைப் போக்குபவராகவும், அவர்களின் பேரிடரில் ஆறுதல் அளிப்பவராகவும் ஆவீராக. அவர்களின் தாகத்திற்குப் புத்துயிரளிக்கும் ஒரு மிடறு நீராகவும், அவர்களின் பிணிகளைக் குணப்படுத்துபவராகவும், அவர்களின் இதயங்களின் பேரார்வ வெந்தனலுக்கு நோயகற்றும் களிம்பாகவும் ஆவீராக. 

மெய்யாகவே, நீரே அதி தாராள குணமுடையவர், மிகுதியான அருளுக்குப் பிரபுவானவர், மேலும், நீரே இரக்கமிக்கவர், கருணையாளர்.

-`Abdu'l-Bahá
-----------------------

தெய்வீக திட்டத்தின் நிருபங்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட போதனைக்குரிய (#11412)

*வடகிழக்கு மாநிலங்களிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது  

*கீழ்க் காணப்படும் பணிவான வேண்டுதல் போதகர்களாலும் நண்பர்களாலும் தினசரி வாசிக்கப்பட வேண்டும்.

கருணைமிக்கப் பிரபுவே! வழிகாட்டுதலெனும் நெடுஞ்சாலையை எங்களுக்குக் காட்டியமைக்கும், இராஜ்யத்தின் கதவுகளைத் திறந்தமைக்கும், மெய்ம்மைச் சூரியனின் வாயிலாக உம்மை அவதரித்துக் கொண்டதற்கும் நீர் போற்றப்படுவீராக. பார்வையற்றோருக்கு நீர்  கண்கள் தந்துள்ளீர்; செவியற்றோருக்கு நீர் செவிப்புலனை வளங்கியுள்ளீர்; இறந்தோரைத் நீர் உயிர்பித்துள்ளீர்; ஏழையை நீர் செல்வந்தனாக்கியுள்ளீர்; வழி தவறியோருக்கு நீர் வழிகாட்டியுள்ளீர்; தாகம் கொண்டவர்களை வழிகாட்டுதல் எனும் ஊற்றுக்கு நீர் வழிகாட்டியுள்ளீர்; தாகம் கொண்ட மீனை மெய்மை என்னும் சமுத்திரத்தை அடைந்திடச் செய்துள்ளீர்; உலாவும் பறவைகளைத் உமது தயை எனும் ரோஜா வனத்திற்கு வரவேற்றுள்ளீர்.

சக்திவாய்ந்தவரே! நாங்கள் உமது  சேவகர்களும் எளியோர்களும் ஆவோம்; நாங்கள் தூர விலகி இருந்து உமது அண்மையை நாடுகிறோம், உமது ஊற்றின் நீருக்காகத் தாகம் கொண்டுள்ளோம், நோயுற்று உமது குணப்படுத்துதலுக்காக ஆவல்கொண்டுமுள்ளோம். உமது பாதையில் நாங்கள் நடந்து செல்கின்றோம், உமது நறுமணத்தைப் பரப்பி, அதனால் எல்லா ஆன்மாக்களும்: “இறைவா, நேர்வழியை நோக்கி எங்களுக்கு வழிகாட்டுவீராக” எனும் கூக்குரலை எழுப்பிடக் கூடும் என்பதைவிட எங்களுக்கு வேறெந்த ஆவலும் இல்லை. ஒளியைக் காண்பதற்காக அவர்களின் கண்கள் திறக்கப்படுமாக, அறிவின்மை எனும் இருளிலிருந்து அவர்கள்  விடுவிக்கப்- படுவார்களாக. உமது வழிகாட்டுதலெனும் ஒளியைச் சுற்றி அவர்கள் ஒன்றுகூடுவார்களாக. தனக்கென பங்கு இல்லாத ஒவ்வொருவரும் ஒரு பங்கினைப் பெறுவாராக. இல்லாதார் உமது இரகசியங்களைப் பாதுகாப்போராவார்களாக.

சர்வவல்லமை பொருந்தியவரே! மன்னித்-தருளும் பார்வையைக் கொண்டு எங்களை நோக்கிடுவீராக. தெய்வீக உறுதிப்படுத்தலை எங்களுக்கு அளிப்பீராக. பரிசுத்த ஆவியின் சுவாசங்களை எங்கள் மீது பொழிவீராக. அதனால் உமது  சேவையில் நாங்கள் உதவப்பட்டும், உமது வழிகாட்டுதலெனும் ஒளியைக் கொண்டு பிரகாசமான நட்சத்திரங்களைப் போன்று, இந்த நகரங்களில் நாங்கள் பிரகாசிகக்கூடும்.

மெய்யாகவே, சக்திவாய்ந்தவரும், வலிமை-யுள்ளவரும், ஞானியும், கண்ணுறுபவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

தெய்வீக திட்டத்தின் நிருபங்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட போதனைக்குரிய (#11413)

*தெற்கு மாநிலங்களிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது

இந்த நாடுகளிலுள்ள நகரங்கள், கிராமங்கள் மற்றும் சிற்றூர்களின் வழி பயணம் செய்து, இறைவனின் நறுமணங்களைப் பரப்புவதில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வோர்  ஆன்மாவும் இந்தப் பிரார்த்தனையை ஒவ்வொரு காலையிலும் வாசித்திட வேண்டும்.

என் கடவுளே! என் கடவுளே! என் எளிமையிலும் வலிமையின்மையிலும், அதி பெரும் பணியாகிய, உமது திருமொழியை மக்களிடத்தில் உயர்த்துவதில் உறுதியாகவும், உமது போதனைகளை உமது மக்களிடையே பரப்புவதிலும்  நான் ஈடுபட்டிருப்பதை நீர் காண்கின்றீர்.

பரிசுத்த ஆவியின் சுவாசத்தைக் கொண்டு  நீர் எமக்கு உதவாவிடில், உமது புகழ்வாய்ந்த இராஜ்யத்தின் சேனைகளைக் கொண்டு எனக்கு உதவாவிடில், தன்னிச்சையாக ஒரு கொசுவைக் கழுகாக மாற்றக் கூடிய, ஒரு துளி நீரை அருவிகளாகவும் கடல்களாகவும் மாற்றவல்ல, ஓர் அணுவை ஒளிகளாகவும் சூரியன்களாகவும் மாற்றவல்ல உந்தன்  உறுதிப்பாடுகளை என் மீது பொழியாவிடில் நான் எவ்வாறு வெற்றிபெற இயலும்? என் பிரபுவே! உந்தன்  வெற்றிகரமான, திறன்பாடும் மிக்க வல்லமையைக் கொண்டு எனக்கு உதவிடுவீராக; அதனால் உந்தன்  புகழையும் நற்பண்புகளையும் எல்லா மக்களிடையே எனது நா உச்சரித்திடக் கூடும், மேலும் உந்தன் அன்பு மற்றும் அறிவு எனும் மதுரசத்தினால் என் ஆன்மா பொங்கி வழிந்திடக்கூடும்.

சர்வ வல்லமை பொருந்தியவரும், நீர்  விரும்பிய யாவற்றையும் செயல்படுத்துகின்றவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

தெய்வீக திட்டத்தின் நிருபங்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட போதனைக்குரிய (#11414)

*மத்திய மாநிலங்களிலுள்ள பஹாய்களுக்காகவெளிப்படுத்தப்பட்டது

இறைவனின் நறுமணங்களைப் பரப்புவோர் ஒவ்வொரு காளை வேளையிலும் இப்பிரார்த்தனையை வாசிக்கட்டுமாக.

என் பிரபுவே, எனதாண்டவரே! உமது இராஜ்யத்தின் பெருஞ்சாலையை நோக்கி என்னை வழிநடத்தியதற்கும், இந்த நேரான, நீன்ட பாதையில் என்னை நடக்கச் செய்ததற்கும், உமது ஒளியின் பிரகாசங்களைக் கண்ணுறுவதற்காக என் கண்களைத் தூய்மைப்படுத்தியற்கும், இரகசியங்கள் இராஜ்யத்திலிருந்து தோன்றும் புனிதத் தன்மை என்னும் பறவைகளின் கீதங்களுக்கு என்னைச் செவிசாய்த்திட வைத்ததற்காகவும், நேர்மைமிக்கோரின் மத்தியில் உமது அன்பின்பால் என் இதயத்தை ஈர்க்கச் செய்தமைக்கும் புகழும் நன்றியும் உம்மைச்  சார்ந்திடுமாக.

பிரபுவே, பரிசுத்த ஆவியினைக் கொண்டு என்னை உறுதிப்படுத்துவீராக, அதனால் நான்  எல்லா   நாடுகளிடையிலும் உமது நாமத்தைதின் பேரில்  அறைகூவலிட இயலும், மற்றும் உமது இராஜ்யம் தோன்றியுள்ளது என்னும் நற்செய்திகளை மனித இனத்தினிடையே வழங்கிட இயலும்.

பிரபுவே! நான் வலுவற்றிருக்கின்றேன், உமது சக்தியையும் வலிமையையும் கொண்டு என்னைப் பலப்படுத்துவீராக. எனது நா தடுமாறுகின்றது, உம்மைப் போற்றவும் புகழவும் எனக்கு ஆற்றலளிப்பீராக. நான் தாழ்ந்தவன், உமது இராஜ்யத்தினுள் நுழைந்திடச் செய்வதன் மூலம் எனக்கு மதிப்பளிப்பீராக. நான் தூர விலகியுள்ளேன், என்னை உமது கருணை என்னும் வாசலை அடையச் செய்வீராக.

பிரபுவே! என்னை ஒரு பிரகாசமான ஒளிவிளக்காகவும், ஒளிவீசும் ஒரு விண்மீனாகவும், கனிகள் நிறைந்ததும், எல்லாப் பகுதிகளுக்கும் நிழல்தரும் கிளைகளைக் கொண்டுள்ளதுமான  ஒரு புனித விருட்சமாக்குவீராக. மெய்யாகவே, வல்லமை பொருந்தியவரும், சக்திவாய்ந்தவரும், கட்டுப்படுத்தவியலாதவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

தெய்வீக திட்டத்தின் நிருபங்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட போதனைக்குரிய (#11415)

*மேற்குமாநிலங்களிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது

*பின்வரும் பிரார்த்தனை ஒவ்வொரு நாளும் வாசிக்கப்பட வேண்டும்:

கடவுளே, கடவுளே, இது ஒரு சிறகொடிந்த பறவை; அவன் பறக்கும் வேகம் மிக மெதுவாக உள்ளது — அவனுக்கு உதவிடுவீராக, அதனால் அவன் வளம், விமோசனம் என்னும் சிகரத்தை நோக்கிப் பறக்கவும், உமது எல்லையற்ற பரவெளியில் அதிமிகு மகிழ்ச்சியுடனும் உவகையுடனும் சிறகடித்து உயரவும், உமது அதி உயரிய நாமத்தினால் தனது இன்னிசையினை எல்லாப் பகுதிகளிலும் எழுப்பவும் உதவி புரிவீராக. இவ்வழைப்பால் செவிகளை மகிழ்வுறச் செய்து, வழிகாட்டுதல் என்னும் அடையாளங்களைக் கண்ணுறுவதன்வழி கண்களை ஒளிபெறச் செய்வீராக.

 பிரபுவே! நான் ஒருவனாகவும் தனியனாகவும், தாழ்ந்தவனாகவும் இருக்கிறேன். எனக்கு, உம்மையல்லாது ஆதரவு வேறில்லை, உம்மைத் தவிர உதவுபவர் எவருமிலர், உம்மையல்லாது பேணி வளர்ப்பவர் யாருமிலர். உந்தன் சேவையில் என்னை உறுதிப்படுத்துவீராக, உமது தேவதூதர் படையினைக் கொண்டு எனக்கு உதவி புரிவீராக, உமது போதனைகளைப் பரப்புவதில் என்னை வெற்றி பெறச்செய்து, உமது உயிரினங்கள்  மத்தியில் என்னை உமது விவேகத்தினைத் துணிவுடன் எடுத்துரைத்திட அனுமதிப்பீராக. மெய்யாகவே, நீரே நலிந்தோரின் உதவியாளரும் வலுக்குறைந்தோரின் பாதுகாப்பாளரும் ஆவீர், மெய்யாகவே, நீரே ஆற்றல் மிக்கவர், வல்லவர், நிபந்தனைக்குட்படாதவர்.

-`Abdu'l-Bahá
-----------------------

தெய்வீக திட்டத்தின் நிருபங்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட போதனைக்குரிய (#11416)

*கனடாவிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது

என் கடவுளே, புகழ் உமக்கே உரியதாகட்டும்! இவர்கள்தாம் உமது கருணை என்னும் நறுமணங்களினால் கவரப்பட்ட உமது ஊழியர்கள், உமது தனித்தன்மை என்னும் விருட்சத்தினுள் எரிகின்ற நெருப்பினால் தூண்டப்பட்டவர்கள்; அவர்களின் கண்கள் உமது ஒருமைத்தன்மை என்னும் சைனாயில் பிரகாசிக்கும் விளக்கின் பேரொளியைக் கண்ணுற்றதனால் ஒளிர்கின்றன.

பிரபுவே! உமது மக்களிடையே உம்மைப்  பற்றிப் பேசச் செய்திட அவர்களின் நாவுகளைத் தளரச் செய்வீராக, உமது அருள், அன்புக் கருணை  ஆகியவற்றின் வாயிலாகவும் அவர்கள் உமது  புகழைப் பாடிடச் செய்வீராக. உமது  தேவாகணங்களைக் கொண்டு அவர்களுக்கு உதவிபுரிவீராக, உமக்குச் சேவை புரிவதற்காக அவர்களை ஆயத்தமாக்குவீராக, மற்றும் உமது  படைப்பினங்களிடையே அவர்களை உமது  வழிகாட்டுதல் என்னும் அடையாளங்களாக ஆக்குவீராக.

மெய்யாகவே, சர்வ சக்திவாய்ந்தவரும், அதி மேன்மை மிக்கவரும், என்றும் மன்னித்தருள்-பவரும், சர்வகருணையாளரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

தெய்வீக திட்டத்தின் நிருபங்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட போதனைக்குரிய (#11417)

*கனடாவிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது

*கடவுளின் நறுமணங்களைப் பரப்புவோர், ஒவ்வொரு காலைவேளையிலும்  இப்பிரார்த்தனையை ஒப்புவிக்க வேண்டும்.

கடவுளே, என் கடவுளே! இந்த பலமற்றவன் தெய்வீக வலிமைக்காக மன்றாடுவதையும், இந்த வறியவன் உமது விண்ணுலகச் செல்வங்களுக்காகக் கெஞ்சுவாதையும், இந்தத் தாகமுற்றவன் மரணமிலா வாழ்வென்னும் ஊற்றுக்காக ஏங்குவதையும், இந்த நோயுற்றவன் நீர்  உம்மால்  தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்காக உமது  அளவற்ற கருணையின் வாயிலாக உமது  வாக்களிக்கப்பட்ட குணப்படுத்துதலுக்காகப் பேராவல் கொண்டிருப்பதை  நீர்  கண்ணுறுகின்றீர்.

பிரபுவே! உம்மைத் தவிர எனக்கு உதவுபவர் வேறிலர் , உம்மைத் தவிர புகலிடம் எதுவுமில்லை, உம்மை மட்டுமின்றி ஆதரவாளர் எவருமிலர். உமது புனித நறுமணங்களைப் பரப்புவதற்கும், உமது  மக்களிடையே மிகச் சிறந்தவர்களுக்கு உமது போதனைகளை எங்கும் பரப்புவதற்கும் உமது தேவதூதர்களைக்  கொண்டு எனக்கு உதவிருவீராக.

என் பிரபுவே! உம்மைத் தவிர வேறெல்லாவற்றிலிருந்தும் என்னைப் பற்றறுத்-திருக்கச் செய்வீராக, உமது  தயை என்னும் விளிம்பினை இறுகப் பற்றிக்கொள்ளச்  செய்வீராக, உமது சமயத்தின்பால் முழு பக்தியுள்ளவனாய் இருந்திடச் செய்வீராக, உமது அன்பில் உறுதியாகவும் நிலையாகவும் இருக்கச் செய்வீராக, மற்றும் நீர் உமது  திருநூலில் விதித்துள்ளவற்றை நிறைவேற்ற உதவிடுவீராக.

மெய்யாகவே, சக்திவாய்ந்தவரும், வலிமை-மிக்கவரும், எல்லாம் வல்லவரும் நீரே ஆவீர்.

-`Abdu'l-Bahá
-----------------------

